சொல் பொருள்
(பெ) 1. ஊர்க்குப் பொதுவான காரியங்கள், 2. பல ஊர்களுக்குப் பொதுவான ஒரு காரியம்,
சொல் பொருள் விளக்கம்
ஊர்க்குப் பொதுவான காரியங்கள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
public affairs
a single act common to many places
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வடு இன்று நிறைந்த மான் தேர் தெண் கண் மடி வாய் தண்ணுமை நடுவண் ஆர்ப்ப கோலின் எறிந்து காலை தோன்றிய செம் நீர் பொதுவினை செம்மல் – நற் 130/1-4 குற்றமின்றி நல்லிலக்கணங்கள் நிறைந்த குதிரைகளைப் பூட்டிய தேரில், தெளிந்த கண்ணையும் மடிக்கப்பட்ட வாயையுமுடைய தண்ணுமைப் பறை இடையிடையே ஒலிக்க கோலால் குதிரைகளை அடித்து விரட்டிக் காலையில் இங்குத் தோன்றிய செவ்விய பண்புகளைக் கொண்ட, பொதுக்காரியங்களைச் செய்யும் நம் தலைவர் ஏழ் ஊர் பொதுவினைக்கு ஓர் ஊர் யாத்த உலை வாங்கு மிதி தோல் போல தலை வரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சே – குறு 172/5-7 ஏழு ஊர்களிலுள்ள பொதுவான ஈயம்பூசும் தொழிலுக்கு ஓர் ஊரில் அமைக்கப்பட்ட உலையில் மாட்டிய துருத்தியைப் போல எல்லை அறியாமல் வருந்தும் என் நெஞ்சே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்