சொல் பொருள்
1. (வி) 1. வேடிக்கைக்குப் பொய்மொழி பேசு, 2. உண்மைக்கு மாறானவற்றைச் சொல், 3. மழை, நிமித்தம், சொல், நம்பிக்கை ஆகிய பிழை, தவறு,
2. (பெ) 1. உண்மை இல்லாதது, தவறானது, 2. போலியானது
சொல் பொருள் விளக்கம்
வேடிக்கைக்குப் பொய்மொழி பேசு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
utter falsehood for fun (to children to convince them), utter an untruth, fail, as a prediction or omen; to deceive hope, as clouds; lie, falsehood, sham, that which is false or counterfeit, pretence, feigning
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தீவிய மிழற்றி முகிழ் நிலா திகழ்தரும் மூவா திங்கள் பொன் உடை தாலி என் மகன் ஒற்றி வருகுவை ஆயின் தருகுவென் பால் என விலங்கு அமர் கண்ணள் விரல் விளி பயிற்றி திதலை அல்குல் எம் காதலி புதல்வன் பொய்க்கும் பூ_கொடி நிலையே – அகம் 54/16-22 இனிய மொழிகளைக் கூறி, வளரும் நிலவினால் விளங்கும் பிறைமதியே! (கழுத்தில்)பொன்சங்கிலி அணிந்த என் மகன் இருப்பிடம் தெரிந்து வந்தால் (உனக்குப்) பால் தருவேன் என்று ஓரக்கண்ணால் பார்த்தவளாய் விரலால் (நிலவை) மீண்டும் மீண்டும் அழைத்து, தேமல் படர்ந்த அல்குலையுடைய என் காதலி, புதல்வனிடம் பொய்யாகக் கூறும் பூங்குடியின் நிலையை(காண்போம் பாகனே) வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என காணிய சென்ற மட நடை நாரை கானல் சேக்கும் துறைவனோடு யான் எவன் செய்கோ பொய்க்கும் இ ஊரே – ஐங் 154 வெள்ளைக் கொக்கின் குஞ்சு இறந்ததாக அதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை கடற்கரைச் சோலையில் தங்கியிருக்கும் துறையைச் சேர்ந்தவனோடு நான் எதனைச் செய்வேன்? (அவன் நல்லவன் என்று)பொய்கூறுகிறது இந்த ஊர்! தண் இயல் எழிலி தலையாது மாறி மாரி பொய்க்குவது ஆயினும் சேரலாதன் பொய்யலன் நசையே – பதி 18/10-12 குளிர்ந்த இயல்பினையுடைய மேகங்கள் மழைபெய்யாமல் மாறிப்போய், மாரிக்காலத்தில் பெய்யாமல் தவறிவிட்டாலும் சேரலாதன் நிறைவேற்றாமலிருக்கமாட்டான் உமது விருப்பத்தை பெரிய கூறி நீப்பினும் பொய் வலை படூஉம் பெண்டு தவ பலவே – ஐங் 283/4,5 பெற்றோர் வாய்மையுடைய உறுதிமொழிகள் பலவற்றைக் கூறி விலக்கினாலும், காதலரின் பொய்மொழிகளான வலையில் விழும் பெண்கள் மிகவும் அதிகமானோர். பொய் பொரு கயமுனி முயங்கு கை கடுப்ப கொய் பதம் உற்றன குலவு குரல் ஏனல் – மலை 107,108 பொய்ச் சண்டைபோடும் யானைக்கன்றுகளின் (ஒன்றோடொன்று)பின்னிப்பிணைந்த துதிக்கைகள் போல, கொய்யப்படும் பக்குவம் பெற்றன பிணைந்துகிடக்கும் கதிர்களையுடைய தினை;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்