சொல் பொருள்
(வி) பொய்யை மெய்யென மயங்கு,
சொல் பொருள் விளக்கம்
பொய்யை மெய்யென மயங்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
get allured by lies
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செழும் தண் மனையோடு எம் இவண் ஒழிய செல் பெரும் காளை பொய்ம்மருண்டு —————————————————– குவளை உண்கண் என் மகள் ——————– —————- மாலை விரி நிலவில் பெயர்பு – நற் 271/3-10 செழுமையும் குளிர்ச்சியும் உள்ள வீட்டோடு நான் இங்கே தனித்திருக்க, தன்னுடன் வருகின்ற பெரிய காளைபோன்றவனின் பொய்மொழிகளில் மயங்கி, —————————— ———————– குவளை மலர்போன்ற மையுண்ட கண்களையுடைய என் மகள், —————————– ————————– மாலைக் காலத்து விரிந்த நிலவில் செல்ல
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்