Skip to content
பொருப்பு

பொருப்பு என்பதன் பொருள்மலை, பக்கமலை,கொல்லி மலை.

1. சொல் பொருள் விளக்கம்

(பெ) மலை, பக்கமலை, மேற்குக் கடற்கரையிலுள்ள கொல்லி மலை

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

mountain, a range of hills, the mount Kolli on the western coast

3.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

வரை தாழ் அருவி பொருப்பின் பொருந – மது 42

மலைச்சாரலில் வீழ்கின்ற அருவியினையுடைய மலைக்கு வேந்தனே

புள்ளொடு பெயரிய பொருப்பு புடை திறந்த வேல் - பரி 21/9

வகை அமை தண் தாரான் கோடு உயர் பொருப்பின் மேல் - கலி 57/16

திண் தேர் செழியன் பொருப்பின் கவாஅன் - அகம் 137/14

அணங்கு உடை உயர் நிலை பொருப்பின் கவாஅன் - அகம் 338/6

தென்னம் பொருப்பின் தலைவ வாழி - சிலப்.மது 20/43

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *