Skip to content

சொல் பொருள்

(பெ) இணைபிரியாத நீர்வாழ் பறவைகள்,

சொல் பொருள் விளக்கம்

பார்க்க மான்று

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a species of aquatic love-birds

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பூ இடைப்படினும் யாண்டு கழிந்து அன்ன
நீர் உறை மகன்றில் புணர்ச்சி போல – குறு 57/1,2

(நீர்ப்பரப்பில் இணையாகப் பறந்து வரும்போது)
ஒரு பூ இடையில் வந்தாலும், (அதனால் ஏற்படும் பிரிவினால்) ஓர் ஆண்டு கழிந்ததைப் போன்ற
நீரில் வாழும் மகன்றில்களின் சேர்க்கை போல

வார் சிறை
குறும் கால் மகன்றில் அன்ன
உடன்புணர் கொள்கை காதலோரே – ஐங் 381/3-5

நீண்ட சிறகுகளையும்,
குட்டையான கால்களையும் கொண்ட மகன்றில் பறவையைப் போல
சேர்ந்தே இருக்கும் கொள்கையினையுடைய காதலர்கள்!

அலர் ஞெமல் மகன்றில் நன்னர் புணர்ச்சி – பரி 8/44

மலர்களினூடே திரியும் மகன்றில் பறவைகளின் நல்ல புணர்ச்சியைப் போன்ற

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *