சொல் பொருள்
(பெ) 1. குழந்தைகள், சிறுவர், 2. மகன்கள்,
சொல் பொருள் விளக்கம்
குழந்தைகள், சிறுவர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
children, sons
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடும் பறை கோடியர் மகாஅர் அன்ன நெடும் கழை கொம்பர் கடுவன் உகளினும் – மலை 236,237 தீவிரமாய்ப் பறையடிக்கும் கழைக்கூத்தாடிகளின் பிள்ளைகளைப் போன்று, நீண்ட மூங்கிலின் உச்சிக்கொம்பில் குரங்குகள் (நழுவியும் ஏறியும்) ஆடிக்கொண்டிருப்பினும் காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி வண் கோள் பலவின் சுளை விளை தீம் பழம் உண்டு படு மிச்சில் காழ் பயன் கொண்மார் கன்று கடாஅ_உறுக்கும் மகாஅர் ஓதை – மலை 336-339 காந்தளின், துடுப்பைப்போன்ற, கமழுகின்ற (வெட்டுவதற்குக்கூரான விளிம்புள்ள)மடலை ஓங்கிப்பாய்ச்சி, உருண்டு திரண்ட குலைகளையுடைய பலாவின் சுளைகள் நன்கு பழுத்த இனிய பழத்தினை தின்று விழுந்த மீதமான(பழங்களின்) கொட்டைகளின் பயன் கொள்ள(=அவற்றை எடுக்க) கன்றுகளால் (அப் பழங்களின்மீது)போரடிக்கும் சிறுவர்களின் ஓசையும்; துருவின் அன்ன புன் தலை மகாரோடு ஒருவிர்_ஒருவிர் ஓம்பினர் கழி-மின் – மலை 217,218 செம்மறியாட்டைப் போன்று, பரட்டைத் தலையினையுடைய (உம்)பிள்ளைகளோடே, ஒருவர் ஒருவராக (ஒருவரை ஒருவர்)இறுகப் பிடித்தவராய்ச் செல்லுங்கள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்