சொல் பொருள்
மசக்கை – உண்டாகியிருத்தல்
சொல் பொருள் விளக்கம்
மயல், மயர்வு, மயக்கம், மசக்கை என்பனவெல்லாம் ஒரு பொருட் சொற்களே எனினும் இவற்றுள் நுண்ணிய வேறுபாடுகள் உண்டு. மயல் – காதல்; மையல் என்பதும் அது; மயர்வு- மதிமருட்சி, மயக்கம்- பொறிபுலன் தடுமாறல்; மசக்கை – வயிறு வாய்த்திருத்தலால் உண்டாகும் சோர்வு. வாந்தி, சோம்பு ஆகியவை. “அவளுக்கு மூன்றுமாதம்; மசக்கையாக இருக்கிறாள்” என்பது வழக்கு. மசக்கை உண்டாதற்குக் காரணம் வயிறு வாய்த்திருத்தல் ஆதலால் வயிறு வாய்த்தல் மசக்கை எனப்படுகிறதாம்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்