சொல் பொருள்
(பெ) 1. மேகம், 2. வெண்மேகம், 3. மூடுபனி,
சொல் பொருள் விளக்கம்
மேகம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cloud, white cloud, fog
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முனை சுட எழுந்த மங்குல் மா புகை மலை சூழ் மஞ்சின் மழ களிறு அணியும் – புறம் 103/6,7 பகைவரின் முனைப்புலத்தைச் சுடுதலான் எழுந்த மங்குலாகிய கரிய புகை மலையைச் சூழும் முகில் போல இளம் களிற்றைச் சூழும் துகில் அணி அல்குல் துளங்கு இயல் மகளிர் அகில் உண விரித்த அம் மென் கூந்தலின் மணி மயில் கலாபம் மஞ்சு இடை பரப்பி துணி மழை தவழும் துயல் கழை நெடும் கோட்டு – சிறு 262-265 துகில் சூழ்ந்த அல்குலினையும், அசைந்த சாயலினையும் உடைய மகளிர் அகிற்புகையை ஊட்டுதற்கு விரித்த, அழகும் மென்மையும் உடைய, கூந்தலைப் போல் (நீல)மணி (நிறமுடைய)மயிலின் தோகையை வெண்மேகத்தின் இடையே (அணையாக)விரித்து, தெளிந்த முகில் தவழும் அசைகின்ற மூங்கிலையுடைய நெடிய மலையின் சிகரத்தில், வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில் துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு பட காணாது பெரும் களிறு பிளிறும் சோலை – நற் 222/7-9 வாழை மரங்கள் உயர்ந்து, சுரபுன்னை மரங்களுடன் பொருந்திய மலைச்சாரலில் தூங்கும் தன் பெண்யானையின் பக்கத்தில் மூடுபனி சூழ்ந்திருக்க, அதனைக் காணாது பெரும் களிறு பிளிறும் சோலையுள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்