சொல் பொருள்
(பெ) 1. பதினான்கு முதல் பத்தொன்பது வயதுவரையுள்ள பருவத்துப் பெண், 2. பெண்,
சொல் பொருள் விளக்கம்
பதினான்கு முதல் பத்தொன்பது வயதுவரையுள்ள பருவத்துப் பெண்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Woman between the ages of 14 and 19;
woman
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறு வரை இறப்பின் காண்குவை செறி தொடி பொன் ஏர் மேனி மடந்தையொடு வென் வேல் விடலை முன்னிய சுரனே – ஐங் 388/3-5 சிறிய குன்றின் இறக்கத்தில் நின்று பார்த்தால் காணலாம், செறிவாக வளையல்கள் அணிந்த பொன்னைப் போன்ற மேனியையுடைய சிறுபெண்ணுடன் வெற்றிகொள்ளும் வேலினையுடைய இளைஞன் சென்ற வழியை மணி மலை பணை தோள் மா நிலமடந்தை அணி முலை துயல்வரூஉம் ஆரம் போல செல் புனல் உழந்த சேய் வரல் கான்யாற்று – சிறு 1-3 மணிகளையுடைய மலையே மூங்கில்(போன்ற) தோள்களாகவுள்ள பெரிய நிலமகளின் அழகிய முலையின்கண் கிடந்து அசைந்துநிற்கும் முத்துமாலை போல, ஓடுகின்ற நீரால் வருந்தின, தொலைவினின்றும் வருகின்ற, காட்டாற்றின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்