Skip to content

சொல் பொருள்

(பெ) பார்க்க : மடம்

சொல் பொருள் விளக்கம்

பார்க்க : மடம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கொடும் தாள் முதலை கோள் வல் ஏற்றை
வழி வழக்கு அறுக்கும் கானல் அம் பெரும் துறை
இன மீன் இரும் கழி நீந்தி நீ நின்
நயன் உடைமையின் வருதி இவள் தன்
மடன் உடைமையின் உவக்கும் யான் அது – குறு 324/1-5

வளைந்த கால்களையுடைய முதலையின் கொல்லுதலில் வல்ல ஆணானது
வழியில் பிறர் செல்வதை இல்லாமற்செய்யும் கடற்கரைச் சோலையுள்ள அழகிய பெரிய துறையில்
திரளான மீன்களுள்ள கரிய கழியை நீந்திக் கடந்து, நீ உனது
அன்புடைமையால் வருகிறாய்; இவள் தனது
அறியாமை உடைமையால் மகிழ்கிறாள்;

மாதரும் மடனும் ஓராங்கு தணப்ப
நெடும் தேர் எந்தை அரும் கடி நீவி
இருவேம் ஆய்ந்த மன்றல் இது – குறி 19-21

(என் பெற்றோரின்)விருப்பமும் (எனது)மடனும் ஒருசேர நீங்கிப்போக,
நெடிய தேரையுடைய என் தந்தையின் அரிய காவலை(யும்) மீறி,
தலைவனும் யானுமே ஆய்ந்துசெய்த மணம் இது

மடன் – கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமை என்னுமொரு பெண்மைப் பண்பு

அன்பும் மடனும் சாயலும் இயல்பும் – அகம் 225/1

அன்பு – ஒருவரையொருவர் இன்றியமையாக்கேதுவாகிய காதல்

மடன் – ஒருவர்குற்றம் ஒருவர் அறியாமை

சாயல் – மென்மைத்தன்மை

இயல்பு – ஒழுக்கம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *