Skip to content

சொல் பொருள்

(வி.மு) பல்வேறு பொருள் – கீழேகாண்க,

சொல் பொருள் விளக்கம்

பல்வேறு பொருள் – கீழேகாண்க,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

various meanings, refer below

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வல் வில் ஓரி கொல்லி குட வரை
பாவையின் மடவந்தனளே
மணத்தற்கு அரிய பணை பெரும் தோளே – குறு 100/5-7

1. உ.வே.சா உரை

வலிய வில்லையுடைய ஓரியினது கொல்லிமலையின் மேல்பக்கத்திலுள்ள
பாவையைப் போல, நான் கண்டு காமுற்ற மகள் மடப்பம் வரப்பெற்றாள்;
ஆயினும், அவளுடைய மூங்கிலைப்போன்ற பெரிய தோள்கள் தழுவுதற்கு அரியனவாகும்

மடவந்தனள் அறியாமையை உடையளாயினள்.யான் அவளைக் கண்டு படுந்துன்பத்தை அறியாளாயினள்
என்பது கருத்து. மடவந்தனள் – வெருவினாள் என்றலுமாம்.

2.பெருமழைப்புலவர் உரை.

வலிய வில்லையுடைய ஓரி வள்ளலினது கொல்லியாகிய மேற்குமலையின்கண் எழுதப்பட்ட
பாவை தன்னைக் கண்டார்க்கு மடமைவரச்செய்யுமா போல, மடமைவரச் செய்பவள் ஆவள்
அவளுடைய மூங்கில் போன்ற பெரிய தோள்கள் தழுவுதற்கு அரியனவாகும்

கொல்லிப்பாவை கண்டாரை மடமையுறுத்துவது போன்று மடமையுறுத்துபவள்.

3. ச.வே.சுப்பிரமணியன் உரை

வல்வில் ஓரி வள்ளலின் மேற்கு மலையின் கொல்லிமலையில் மலையைக் குடைந்து செய்த
கொல்லிப்பாவை போல் அழகும் இளமையும் பொருந்தியவள் என் காதலி.
அவளது மூங்கில் போன்ற பருத்த தோள்கள் தழுவுவதற்கு அரியவை ஆகும்

4. வைதேகி எர்பர்ட் ஆங்கில உரை

The young woman with arms
like bamboo is hard to embrace,
and naive like the Kolli goddess
who resides on the westside
of strong-bowed Ori’s mountain,

மடவந்தனள் she is delicate, she is naive

5. இரா. இராகவையங்கார் உரை

பாவையைப் போல கண்டார்க்கு அறியாமை வருதல் செய்தாள்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *