சொல் பொருள்
(பெ) 1. மடப்பம், பேதமை, கபடமின்மை, 2. மடப்பம் பொருந்தியவள்,
சொல் பொருள் விளக்கம்
மடப்பம், பேதமை, கபடமின்மை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Simplicity, artlessness, credulity, guilelessness
a lady possessing simplicity and artlessness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மடவரல் மகளிர் பிடகை பெய்த செவ்வி அரும்பின் பைம் கால் பித்திகத்து – நெடு 39,40 பேதைமை (மிக்க)பெண்கள் — (தம் கையிலுள்ள) பூத்தட்டுகளில் பறித்துப்போட்ட (மலரும்)பக்குவத்திலுள்ள மொட்டுக்களின் பசிய காலினையுடைய பிச்சியின் ஒண் தொடி மடவரல் கண்டிகும் கொண்க – ஐங் 194/2 ஒளிரும் தோள்வளைகளைக் கொண்ட மடப்பம் பொருந்தியவளைக் காண்பாயாக தலைவனே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்