சொல் பொருள்
(பெ) 1. அறிவில்லாதவர், 2. பேதையர்,
சொல் பொருள் விளக்கம்
அறிவில்லாதவர், பேதையர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
foolish people, innocent people
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வட புல வாடைக்கு பிரிவோர் மடவர் வாழி இ உலகத்தானே – நற் 366/11,12 வடநாட்டிலிருந்து வாடை வீசும் காலத்தில் பிரிந்து செல்வோர் அறிவில்லாதவர் ஆவார், வாழ்க நெஞ்சமே! இந்த உலகத்தில். இளையரும் மடவரும் உளரே அலையா தாயரொடு நற்பாலோரே – குறு 246/7,8 இளையவர்களும், மடப்பமுடையோரும் இருக்கின்றனரே! இப்படி அலைக்கழிக்காத அன்னையரோடு! அவர்கள் புண்ணியம் செய்தவர்கள்!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்