சொல் பொருள்
(வி.மு) அறியாமையுடையவனாய்(ளாய்) இருக்கிறாய்,
சொல் பொருள் விளக்கம்
அறியாமையுடையவனாய்(ளாய்) இருக்கிறாய்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
you are ignorant
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரு வரை அடுக்கம் பொற்ப சூர்_மகள் அருவி இன் இயத்து ஆடும் நாடன் மார்பு தர வந்த படர் மலி அரு நோய் நின் அணங்கு அன்மை அறிந்தும் அண்ணாந்து கார் நறும் கடம்பின் கண்ணி சூடி வேலன் வேண்ட வெறி மனை வந்தோய் கடவுள் ஆயினும் ஆக மடவை மன்ற வாழிய முருகே – நற் 34/4-11 பெரிய மலைச் சரிவுகள் பொலிவுபெற, சூரர மகளிர் அருவியின் ஓசையே இசையாகக் கொண்டு ஆடுகின்ற நாட்டையுடைய தலைவனின் முயக்கத்தினால் ஏற்பட்ட துன்பம் மிகுந்த நீங்குதற்கு அரிய இந்தக் காமநோய் நீ வருத்தியதால் ஏற்பட்டது இல்லை என அறிந்தும், தலைநிமிர்ந்து கார்காலத்து மலரும் நறிய கடம்பின் இலைகளால் தலைமாலை செய்து சூடிக்கொண்டு வேலன் வெறியாடி வேண்டிக்கொள்ள வெறிக்களத்துக்கு வந்திருக்கிறாய்! நீ உண்மையாகவே கடவுளே ஆயினும் ஆகுக, ஆனால் நீ அறியாமை உடைத்திருக்கிறாய், வாழ்க முருகனே! பெரும் பெயர் தந்தை நீடு புகழ் நெடு நகர் யாயொடு நனி மிக மடவை – நற் 162/8,9 மிக்க பொருளையுடைய நின் தந்தையின் பெருமனையின்கண் மனையறத்தால் நீண்ட புகழ்பெற்ற தாயினன்பு நிழலில் வளர்ந்தவளாதலால் நீ மிகமிக இளமையும் மடமையும் உடையவளாவாய். மடவை மன்ற கொண்க வயின்-தோறு இன்னாது அலைக்கும் ஊதையொடு ஓரும் நும் இல் புலம்பின் மாலையும் உடைத்தே இன மீன் ஆர்ந்த வெண்_குருகு மிதித்த வறு நீர் நெய்தல் போல வாழாள் ஆதல் சூழாதோயே – நற் 183/6-11 அறியாமையையுடையாய், தலைவனே! – இடந்தோறும் துன்புறுத்தி அலைக்கும் ஊதைக்காற்றோடு நீ இல்லாத தனிமைக்காலத்து வரும் மாலைப்பொழுதும் சேர்ந்துகொள்கிறது; கூட்டமான மீன்களை நிறைய உண்ட வெண்குருகு மிதித்த நீரற்ற குளத்தின் நெய்தல் மலர் போல இவள் உயிர்வாழமாட்டாள் என்பதனை நினைத்துப்பார்க்காத நீ –
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்