சொல் பொருள்
(பெ) 1. அறிவில்லாதவர், 2. மடப்பத்தையுடைய மகளிர், 3. அறியாமையுள்ளவர்,
சொல் பொருள் விளக்கம்
அறிவில்லாதவர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
foolish people, innocent women, ignorant people
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும் பிறர்க்கு நீ வாயின் அல்லது நினக்கு பிறர் உவமம் ஆகா ஒரு பெரு வேந்தே – பதி 73/1-3 அறிவுடையோர் நினைத்துப்பார்த்தாலும், அறிவில்லாதர் நினைத்துப்பார்த்தாலும் பிறர்க்கு நீ ஒப்புமையாக அமைவதல்லாமல், உனக்குப் பிறர் ஒப்புமை ஆகாத தனிச் சிறப்பு வாய்ந்த வேந்தனே! மறுபிறப்பு இல் எனும் மடவோரும் சேரார் – பரி 5/76 மறுபிறப்பு என்பது இல்லையென்று வாதிடும் அறிவற்றோரும் உன்னை ஒருபோதும் அடையமாடார்கள்; மடவோர் நகாஅர் அன்ன நளி நீர் முத்தம் – சிறு 56,57 மடப்பத்தையுடைய மகளிர் சிரிப்பு(ப் பல்) போன்ற செறிந்த நீர்மையுடைய முத்தினை, ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல் வளை கை கிணைமகள் வள் உகிர் குறைத்த குப்பை வேளை உப்பு இலி வெந்ததை மடவோர் காட்சி நாணி கடை அடைத்து இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும் அழி பசி வருத்தம் வீட – சிறு 135-140 மெலிவடையச்செய்யும் பசியால் வருந்திய, ஒடுங்கி ஒட்டிப்போன, வயிற்றினையும், வளையல்(அணிந்த) கையினையும் உடைய கிணைமகள் பெரிய நகத்தால் கிள்ளின குப்பை(யில் முளைத்த) கீரை உப்பில்லாமல் வெந்ததை, வறுமையுறுதல் இயல்பென்று அறியாது புறங்கூறுவோர் காணுதற்கு நாணி, தலை வாயிலை அடைத்து, கரிய பெரிய சுற்றத்துடன் ஒன்றாக இருந்து தின்னும், அழிக்கின்ற பசியின் வருத்தங்கள் கெடுமாறு;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்