Skip to content

சொல் பொருள்

1. (வி.எ) செய்யாவென்னும் வாய்பாட்டு வினையெச்சம், மடுத்து,

2. (பெ) அகன்ற மண்குடம்,

சொல் பொருள் விளக்கம்

செய்யாவென்னும் வாய்பாட்டு வினையெச்சம், மடுத்து,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

feeding, earthen vessel

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
உறாஅ வறு முலை மடாஅ
உண்ணா பாவையை ஊட்டுவோளே – ஐங் 128

கண்கூடாகப் பார்த்தேன் அல்லவா, தலைவனே! உன் காதற்பரத்தையை,
நன்கு வளராத வறிய தன் முலையை வாயில் வைத்து,
உண்ணாத பாவைக்கு ஊட்டிக்கொண்டிருந்தவளை –

அடை சேம்பு எழுந்த ஆடு_உறும் மடாவின் – பதி 24/20

இலையையுடைய சேம்பினைப் போன்ற அடுப்பிலிடப்பட்ட பெரிய பானையினையும்,

மடாஅ நறவு உண்டார் போல மருள
விடாஅது உயிரொடு கூடிற்று என் உண்கண்
படாஅமை செய்தான் தொடர்பு – கலி 147/54-56

பெரிய பானையளவு மது உண்டவர் போல, என்னை மயங்க
விடாமல் என் உயிரோடு கலந்துவிட்டது, என் மைதீட்டிய கண்களை
உறங்காமற் செய்தவனின் நட்பு;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *