சொல் பொருள்
மடியில் மாங்காயிடல் – திட்டமிட்டுக் குற்றப்படுத்தல்
சொல் பொருள் விளக்கம்
மாந்தோப்புப் பக்கம்போனான் ஒருவன். அவன் மேல் குற்றம் சாட்டித் தண்டனை வாங்கித் தரவேண்டும் எனத் தோட்டக்காரன் நினைத்தான். உடனே மரத்தின் மேல் ஏறி ஒரு மாங்காயைப் பறித்து, வழியே போனவன் மடியில் வைத்துவிட்டு அவன் கையைப் பின்கட்டாகக் கட்டிக் கொண்டு ஊர் மன்றுக்கு அழைத்துச் சென்று குற்றம் சாற்றினான். குற்றம் சாற்ற வேண்டு மென்றால் குற்றமா கிடையாது? வல்லடிக்காரனுக்குக் குற்றமொன்றைப் படைத்துச் சான்றுடன் உறுதிப்படுத்துவது தானா கடினம். “மடியில் மாங்காயிட்டது போல மாட்டிவைத்து விட்டானே” என்பது வழங்குமொழி.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்