சொல் பொருள்
மடியைப் பிடித்தல் – இழிவுபடுத்தல்; கடனைக் கேட்டல்
சொல் பொருள் விளக்கம்
மடி என்பது வேட்டி என்னும் பொருளது. மடி என்பது வயிற்றையும் குறிப்பது. வயிற்றுப் பகுதியில் வேட்டிச் சுற்றில் பணம் வைப்பதும் பணப்பை வைப்பதும் வழக்கம். மடியைப் பிடித்தல் என்பது கடனைக் கேட்டல் என்னும் பொருளிலும், இழிவுபடுத்தல் என்னும் பொருளிலும் வந்தது. வேட்டியைப் பிடித்தல் என்பது அவிழ்த்தலின் முற்பாடு, உடுக்கை இழக்க நேர்வது – அதனைக் குறிப்பால் குறித்தல் கூட இழிவாவது. அதற்கு ‘மடி’ வேட்டி; மடியில் வைத்த பணம் ‘மடி’ ஆயது இடவாகுபெயர். இரண்டு நிலைகளாலும் இருபொருள்கள் கிளர்ந்தன.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்