சொல் பொருள்
(பெ) 1. கள், 2. தேன், 3. கள் இருக்கும் குடம்,
சொல் பொருள் விளக்கம்
கள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
toddy, fermented liquor, honey
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிலம் புதை பழுனிய மட்டின் தேறல் – புறம் 120/12 நிலத்தின்கண் புதைக்கப்பட்ட முற்றிய கள்ளின் தெளிவை துணை புணர்ந்த மட மங்கையர் பட்டு நீக்கி துகில் உடுத்தும் மட்டு நீக்கி மது மகிழ்ந்தும் – பட் 106-108 (தம்)கணவரைக் கூடிய மடப்பம் பொருந்திய இளம்பெண்கள், பட்டுடையை நீக்கிப் (மெல்லிய)பருத்தி ஆடையை உடுத்தவும், (மிதமான கிளர்ச்சியைத் தரும்)கள்ளைத் தவிர்த்து (வெறியூட்டும்)மது (உண்டு) மகிழ்ந்தும், கட்டுவட கழலினர் மட்டு மாலையர் – பரி 12/24 கட்டுவடத்தோடு, கால்விரலில் மோதிரம் அணிந்துகொண்டோரும், தேன் துளிக்கும் மாலையினரும், மட்டு வாய் திறப்பவும் மை விடை வீழ்ப்பவும் – புறம் 113/1 கள் குடத்தை வாய் திறப்பவும், ஆட்டுக்கிடாயை வீழ்ப்பவும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்