சொல் பொருள்
(பெ) அழகுற அமைக்கப்பட்ட உப்பரிகை உள்ள வீடு, மேல்நிலை மாடம்,
சொல் பொருள் விளக்கம்
அழகுற அமைக்கப்பட்ட உப்பரிகை உள்ள வீடு, மேல்நிலை மாடம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
beautiful storied house;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நளிர் மலை பூ கொடி தங்குபு உகக்கும் பனி வளர் ஆவியும் போன்ம் மணிமாடத்து உள் நின்று தூய பனி நீருடன் கலந்து கால் திரிய ஆர்க்கும் புகை – பரி 10/122-125 செறிந்த மலையிடத்துப் பூங்கொடிகளிடத்தில் தங்குவதற்காக மேலேறிச் செல்லும், குளிர்ச்சி மிகுந்த நீராவியான மேகத்தைப் போன்றிருந்தது, மதுரை நகரின் மணிமாடங்களின் உள்ளேயிருந்து தூவிய பனிநீர் மணத்துடன் கலந்து, தென்றல் காற்று மணமுடையதாக மாறும்படியாக எழுப்பும் நறுமணப்புகை;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்