சொல் பொருள்
(பெ) 1. விரும்பாதன, 2. பொருந்தாதன,
சொல் பொருள் விளக்கம்
விரும்பாதன,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
words of disliking, unfitting words
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கண்டேன் நின் மாயம் களவு ஆதல் பொய் நகா மண்டாத சொல்லி தொடாஅல் – கலி 90/1,2 “கண்டேன், உன் வஞ்சகச் செயல்கள் மறைவாக நடைபெறுவதை; பொய்யாகச் சிரித்து நான் விரும்பாதவற்றைச் சொல்லி என்னைத் தொடாதே! மண்டாத கூறி மழ குழக்கு ஆகின்றே – கலி 108/21 பொருந்தாதவற்றைக் கூறிச் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கின்றாய்!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்