Skip to content

சொல் பொருள்

(பெ) 1. சூரியன், 2. மண்டலம், நாட்டின் பெரும்பகுதி, 3. நிலம், உலகம், 4. கண்ணாடி, 5. சந்திரன், 6. சூரியப்பாதையின் வான வெளிப்பகுதி, 7. வட்டமான பாதை, 8. வட்டம்,

சொல் பொருள் விளக்கம்

சூரியன்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

sun, division of a country, earth, mirror, moon, space around sun’s path, circular path, circle

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பகல் செய் மண்டிலம் பாரித்து ஆங்கு – பெரும் 442

பகற்பொழுதைச் செய்யும் ஞாயிறு தன் கதிர்களைப் பரப்பித் தோன்றினாற் போல,

வியன் கண் முது பொழில் மண்டிலம் முற்றி – மது 190

அகன்ற இடத்தையுடைய பழைய நாவலந்தீவின் நாடுகளை நின்னதாக வளைத்து

கடல் சூழ் மண்டிலம் பெறினும்
விடல் சூழலன் யான் நின் உடை நட்பே – குறு 300/7,8

கடல் சூழ்ந்த நிலத்தைப் பெற்றாலும்
விட்டுப் பிரிவதை எண்ணிப்பார்க்கமாட்டேன் – உனது நட்பினை

நிழல்_காண்_மண்டிலம் நோக்கி
அழல் புனை அவிர் இழை திருத்துவாள் குறிப்பும் – பரி 21/23,24

தன் உருவத்தைக் காட்டும் கண்ணாடியைப் பார்த்து,
தீயினை அணிந்துகொண்டது போன்ற ஒளிவிடும் தன் அணிகலன்களைத் திருத்திக்கொள்வாளின் மெய்ப்பாடும்,

இவட்கே செய்வு_உறு மண்டிலம் மையாப்பது போல்
மை இல் வாள் முகம் பசப்பு ஊரும்மே – கலி 7/7,8

ஆனால் இவளுக்கோ, செம்மையாகச் செய்யப்பட்டது போன்ற முழுநிலவில் மேகம் படர்வது போல்
மறு இல்லாத ஒளியையுடைய முகத்தில் பசப்பு பரவத் தொடங்கிற்று;

செஞ்ஞாயிற்று செலவும் அஞ்ஞாயிற்று
பரிப்பும் பரிப்பு சூழ்ந்த மண்டிலமும்– புறம் 30/2-4

சிவந்த ஞாயிற்றின் வீதியும், அஞ் ஞாயிற்றின்
இயக்கமும், அந்த இயக்கத்தால் சூழப்படும் வானவெளிப்பகுதியும்

கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின்
அடிபடு மண்டிலத்து ஆதி போகிய
கொடி படு சுவல இடுமயிர் புரவியும் – மது 389-391

(கோலைக்)கொண்ட வலவன் தான் பயிற்றுவித்தைக் கூறியபடி ஓட்டலின்,
தடம் பதிந்த வட்டமான பாதைகளில் ஆதிஎன்னும் ஒட்டத்தில் ஓடின
ஒழுங்குபட்ட பிடரிமயிரினையும், இடுமயிரினையும் (சவரி முடி)உடைய குதிரைகளும்

பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து
வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப – அகம் 269/17,18

ஓசை பரந்து எழும் பெரிய வாய் உள்ள வட்டத்தையுடைய
ஊதுகொம்பினிடத்து எழுந்த தெளிந்த இசை ஒலிக்க

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *