சொல் பொருள்
மண்டி – கசடன்
சொல் பொருள் விளக்கம்
எண்ணெய் வைக்கப்பட்ட கலத்தில் அவவெண்ணெய் தீர்ந்த பின்னர்ப் பார்த்தால் அடியில் ‘மண்டி’ கிடக்கும். எண்ணெயில் இருந்த கசடு படிவதே மண்டியாம். சிலரை வெளிப்பட ‘மண்டி விளக்கெண்ணெய்’ என்று எள்ளுவது வழக்கே. எண்ணெய் ஆட்டுங்கால் போட்ட பொருள்களின் கசடுகளும் பின்னே விழுந்த தூசி தும்புகளும் சேர்ந்து மண்டிக் கிடக்கும். அம்மண்டி, போன்றவனை மண்டி என்றது ஒப்பினாகிய பெயராம். வேண்டியவற்றை விடுத்து வேண்டாதவற்றைத் தேக்கிக் கொள்பவன் மண்டி எனப்பட்டான் என்க. பொருள்கள் மண்டி (செறித்து)க் கிடக்கும் இடம் மண்டி எனப்படும் அது புகைமண்டல், புகழ்மண்டல் போன்ற செறிவு.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்