சொல் பொருள்
மண்ணடித்தல் – கெடுத்தல்
சொல் பொருள் விளக்கம்
கையில் இருப்பது தேன். அதனை மண்ணில் கொட்டினால் என்னாம் “அங்கணத்துள் சொரிந்த அமிழ்து” என உவமைப்படுத்தினார் திருவள்ளுவர். மண் உயர்ந்ததே, எனினும். உண்ணும் உணவுக்கு உறைவுடையதே எனினும் அதனை உண்ணலாமா? உண்பனவற்றோடு கலந்து உண்ணலாமா? உண்ண ஆகாத அதனை உணவில் கலந்து விற்கும் கயமையரைப் போலக் குமுகாயக் கேடர் ஒருவர் உளரா? பொன்னாம் வாழ்வை மண்ணாக்கும் பேதையர் எத்துணையர்?” என் நினைவில் எல்லாம் மண்ணடித்து விட்டான். மண்ணைப் போட்டுவிட்டான்” என்பதில் என் நினைவைக் குழிக்குள் தள்ளி மண்ணால் மூடிப் புதைத்து விட்டான் எனச் சாக்காட்டுத் துயர் அன்றோ ஓலமிடுகின்றது?
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்