சொல் பொருள்
மண்ணைக்கவ்வல் – தோற்றல்
சொல் பொருள் விளக்கம்
போரில் குப்புற வீழ்தல் மண்ணைக் கவ்வலாம். மற்போரில் மல்லாக்க வீழ்தலும் முதுகில் மண்படலும் தோல்வியாக வழங்குகின்றது. முன்பு குப்புற வீழ்த்திக் குதிரை ஏறல் வெற்றிச் சின்னம். குதிரை குப்புற வீழ்த்தியது மன்றிக் குழியையும் பறித்தது என்பதும் வீழ்ச்சி விளக்கம், “கீழே விழுந்ததும் முதுகில் மண் படவில்லை” எனவரும் மரபுத் தொடராலும், கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்னும் மரபுத்தொடராலும் ‘கீழே வீழ்தல்’ மண்படுதல்’ என இழிவுப் பொருளாதல் தெளிவாம்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்