சொல் பொருள்
மதார் பிடித்தல் – தன்நினைவு அற்றிருத்தல்
சொல் பொருள் விளக்கம்
இருந்தது இருந்தபடியே, எது நடந்தாலும் அறியாதபடியே மூச்சுவிடுதல் பார்த்தல் ஆயவையன்றி உணர்வு வெளிப்படுத்த மாட்டாத நிலையில் இருப்பதை மதார் பிடித்தல் என்பர். மதம் பிடித்தல் காம வெறிகொள்ளல் இது செயலற்று உயிர்ப் பொ(ய்)ம்மைபோல் இருத்தலாம். இதனைப் பேயறைந்தாற் போலிருத்தல் எனவும் கூறுவார். மதமதப்பு என்பது மதர்த்தலாம். மதர்த்தல் என்பது மரத்துப்போதல் என்பதைக் குறிக்கும். மரத்தின் இயல்பு என்னவோ அந்நிலையடைதல் என்பதைக் காட்டும் வழக்குச் சொல்லாம் இது. “மதார் பிடித்தவன் போல் இருக்கிறான்” “மதார் பிடித்து விட்டதா உனக்கு? சொன்னது காதில் விழுகிறதா?” என்பவற்றிலிருந்து மதார்ப் பொருள் விளங்கும்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்