சொல் பொருள்
(பெ) பறைவகை,
சொல் பொருள் விளக்கம்
பறைவகை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a kind of drum
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒத்த குழலின் ஒலி எழ முழவு இமிழ் மத்தரி தடாரி தண்ணுமை மகுளி ஒத்து அளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார் நித்தம் திகழும் நேர் இறை முன்கையால் அ தக அரிவையர் அளத்தல் காண்-மின் – பரி 12/40-44 ஒன்றோடொன்று ஒத்து இசைக்கும் குழல் வாத்தியங்களினின்றும் இசை எழ, முழவின் முழக்கத்தோடு மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி ஆகிய இசைக்கருவிகளின் தாளத்தை அளந்து சீரின் கூறுபாட்டை அறிந்து, ஒருவருக்கொருவர் பின்னிடாத தகுதியுடையவராய் நடன அசைவுகள் நன்கு விளங்கும் நேராக இறங்கும் தம் முன்கையால் அழகுமிக்கதாய் ஆடல்மகளிர் அந்தத் தாளத்தை அளத்தலைப் பாருங்கள்; மத்தரி என்பதை மத்தளம் என்று கூறுவர் பம்பை, தொண்டகச் சிறுபறை, தழல், தண்ணும்மை, துடி, பதலை ஆகிய பறைகள் வேட்டைப் பறைகளாக இயங்கியுள்ளன. அரிப்பறை, எல்லரி சல்லரி தட்டை, தடாரி, மத்தரி, கிணை ஆகிய பறைகள் வேளாண் பறைகளாக விளங்கியுள்ளன. முழவு, முரசு, பணை, பெருந்துடி, தண்ணும்மை, கிணை ஆகிய பறைகள் போர்ப்பறைகளாக முழங்கியுள்ளன.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்