சொல் பொருள்
கொள்ளிக் குடம் வரும் இடக்குறிப்பாக மந்தைக் குடம் என்று முதுகுளத்தூர் வட்டாரத்தில் வழங்கு கின்றது
சொல் பொருள் விளக்கம்
இறப்புச் சடங்குகளுள் ஒன்று கொள்ளிக் குடம் உடைத்தல் என்பது. அக் கொள்ளிக் குடம் ஊரின் எல்லை வரை கொண்டு வரப்பட்டு ஊர் மந்தையில் உடைக்கப்படும். அவ்வளவுடன் மகளிர் திரும்புவர். அக் கொள்ளிக் குடம் வரும் இடக்குறிப்பாக மந்தைக் குடம் என்று முதுகுளத்தூர் வட்டாரத்தில் வழங்கு கின்றது. மந்தை ஆடுமாடு அடையும் ஊர்ப் பொதுவிடம். மன்று> மந்து > மந்தை.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்