Skip to content

சொல் பொருள்

(வி.அ) 1. தேற்றமாக, நிச்சயமாக, உறுதியாக, 2. தெளிவாக, 

சொல் பொருள் விளக்கம்

தேற்றமாக, நிச்சயமாக, உறுதியாக, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

certainly, clearly

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வண்டு படு மலரின் சாஅய்
தமியென் மன்ற அளியென் யானே – குறு 30/5,6

வண்டுகள்மொய்த்து உழக்கிய குவளை மலரைப் போல நலிந்து
 தேற்றமாகத் தனித்தவளாயினேன், யான் இரங்குதற்குரியேன்

கல் உயர் நனம் தலை நல்ல கூறி
புணர்ந்து உடன் போதல் பொருள் என
உணர்ந்தேன் மன்ற அவர் உணரா ஊங்கே – குறு 297/5-7

மலைகள் ஓங்கி உயர்ந்த அகன்ற இடத்தில் நல்ல சொற்களைக் கூறி
தலைவனோடு சேர்ந்து போதலே செய்யத்தக்க காரியம் என்று
யான் உணர்ந்தேன் தெளிவாக, அவர் உணர்வதற்கு முன்னர்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *