சொல் பொருள்
(பெ) மக்கள் கூடும் ஊர்ப்பொது இடம்,
சொல் பொருள் விளக்கம்
மக்கள் கூடும் ஊர்ப்பொது இடம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
place for common public gathering
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மலர் தலை மன்றத்து பலர் உடன் குழீஇ கையினும் கலத்தினும் மெய் உற தீண்டி பெரும் சினத்தால் புறக்கொடாஅது இரும் செருவின் இகல் மொய்ம்பினோர் – பட் 69-72 அகன்ற இடத்தையுடைய அம்பலங்களில் பலரும் சேரத் திரண்டு, (வெறும்)கைகளாலும் ஆயுதங்களாலும் உடலில் படும்படி பற்றியும் அடித்தும், மிகுந்த சினத்தால் புறமுதுகுகொடாமல், நீண்ட போர்(செய்யும்) போட்டிபோடும் வலிமையுடையோர் அரு விலை நறும் பூ தூஉய் தெருவில் முது வாய் கோடியர் முழவொடு புணர்ந்த திரி புரி நரம்பின் தீம் தொடை ஓர்க்கும் பெரு விழா கழிந்த பேஎம் முதிர் மன்றத்து – பட் 252-255 அரிய விலை(க்கு வாங்கிய) நறுமணமுள்ள பூக்களைச் சிதறி, தெருவினில் அறிவு வாய்க்கப்பெற்ற கூத்தருடைய மத்தளத்தின் தாளத்தோடு கூடின முறுக்கப்பட்ட புரி(போன்ற) நரம்பின் இனிய கட்டினையுடைய யாழைக் கேட்கும் பெரிய திருநாள் முடிந்துபோன, அச்சம் மிகுந்த, மன்றத்தில் காஞ்சி தாது உக்கு அன்ன தாது எரு மன்றத்து தூங்கும் குரவையுள் – கலி 108/60,61 காஞ்சிப் பூவின் பூந்தாதுக்கள் உதிர்ந்தது போன்ற சாண எருவையுடைய ஊர் மன்றத்தில் ஆடுகின்ற குரவைக் கூத்தில்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்