Skip to content

சொல் பொருள்

(பெ) 1. மயக்கம், 2. மறதி,

சொல் பொருள் விளக்கம்

மயக்கம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Bewilderment, confusion, forgetfulness

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே
பெரும் கலி ஞாலத்து தொன்று இயல் புகழது
கண்டு மயர் அறுக்கும் காமக்கடவுள் – பரி 15/35-37

இருங்குன்றம் என்ற பெயர் பரந்த அந்த மலை
கடல்சூழ்ந்த நிலவுலகில் தொன்மையான இயல்பையுடைய புகழினைக் கொண்டது;
அதனைக் கண்ட அளவில் காண்போரின் மயக்கத்தைப் போக்கும் வழிபடும் கடவுள் அது;

அயிரி யாறு இறந்தனர் ஆயினும் மயர் இறந்து
உள்ளுப தில்ல தாமே – அகம் 253/20,21

அயிரி என்னும் யாற்றினைக் கடந்து சென்றனராயினும், மறதி அற்று
என்றும் அவர் நினைந்திருப்பார்
வேங்கடசாமி நாட்டார் உரை.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *