சொல் பொருள்
(பெ) 1. வயிறு, 2. விலாப்பக்கம், 3. இடை, இடுப்பு, நடுப்பக்கம்,
சொல் பொருள் விளக்கம்
வயிறு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Stomach, abdomen, side of the body, waist, middle
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல் வளை கை கிணை_மகள் – சிறு 135,136 மெலிவடையச்செய்யும் பசியால் வருந்திய, ஒடுங்கி ஒட்டிப்போன, வயிற்றினையும், வளையல்(அணிந்த) கையினையும் உடைய கிணைமகள் மாரி யானையின் மருங்குல் தீண்டி பொரி அரை ஞெமிர்ந்த புழல் காய் கொன்றை – நற் 141/2,3 மழையில் நனையும் யானையின் பக்கங்கள் உராய்தலால் பொரிந்தது போல் ஆகிய அடிமரத்தின் பட்டை தேய்ந்த, உள்ளே துளையுள்ள காய்களைக் கொண்ட கொன்றை நுணங்கு எழில் ஒண் தித்தி நுழை நொசி மட மருங்குல் வணங்கு இறை வரி முன்கை வரி ஆர்ந்த அல்குலாய் – கலி 60/3,4 நுட்பமான அழகிய ஒளிவிடும் சிறு புள்ளிகளையும், மிகவும் சிறியதாக மெலிந்திருக்கும் இளமை ததும்பும் இடையினையும், வளைந்து இறங்குகின்ற, வளையல் அணிந்த முன்கையினையும், அழகு நிறைந்த அல்குலையும் உடையவளே! மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல் – அகம் 297/7 நடுப்பக்கம் மெலிந்த அச்சம் மிக்க நடுகல்லில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்