சொல் பொருள்
(பெ) 1. மருட்சி, மனக்கலக்கம், தடுமாற்றம், 2. வியப்பு
சொல் பொருள் விளக்கம்
மருட்சி, மனக்கலக்கம், தடுமாற்றம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Bewilderment, wonder, astonishment
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மா மலை நாட மருட்கை உடைத்தே செம் கோல் கொடும் குரல் சிறுதினை வியன் புனம் கொய் பதம் குறுகும்_காலை எம் மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே – நற் 57/7-10 பெரிய மலைநாடனே! என் மனம் மருட்சியடைகின்றது, நிமிர்ந்த தண்டினையும் வளைந்த கதிர்களையும் கொண்ட சிறுதினையின் அகன்ற கொல்லைக்காடு கதிர் அறுக்கும் பருவத்தை அடையும் இந்த நேரத்தில், எமது கருத்த நெய்ப்பசையுள்ள கூந்தலைக்கொண்டவளின் சிறப்பு மிக்க நலம் சிதைந்துவிடுமே என்று – நினைக்கும்_காலை மருட்கை உடைத்தே எனை பெரும் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல் – புறம் 217/1,2 கருதுங்காலத்து வியக்கும்தன்மையுடையது எத்துணையும் பெரிய தலைமையுடனே இவன் சிறப்புகளைக் கைவிட்டு வரத் துணிதல்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்