சொல் பொருள்
மருந்து குடித்தல் – நஞ்சுண்ணல்
சொல் பொருள் விளக்கம்
மருந்து என்பது நோய் நீக்கப் பொருள். அதுவே உயிர் காக்கும் பொருள். ஆனால் உயிர் போக்கும் நஞ்சும் மருந்து எனப்படுவது வழக்கு. “அவள் மருந்து குடித்துவிட்டாள்’ எனின் நஞ்சுண்டு விட்டாள் என்பது பொருளாம். “இப்படியே நீ துயரப் படுத்தினால் நான் ஒரு நாளைக்கு மருந்து குடித்துச் சாகத்தான் போகிறேன்” என்பதும் மனச்சுமை தாங்காமையால் வெளிப்படும் செய்தியாம். அவர்கள் துன்ப நீக்கத்திற்கு அடிப்படையாக இருப்பதால் அதனையும் மருந்து என்பர் போலும் ‘சாவா மருந்து’ என்னும் குறளுக்கு ‘நஞ்சுப் பொருள் தருவதும் கருதத்தக்கது.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்