சொல் பொருள்
(பெ) 1. விலங்கின் கொம்பு, 2. யானையின் தந்தம், 3. யாழின் ஓர் உறுப்பு,
சொல் பொருள் விளக்கம்
விலங்கின் கொம்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
horn of a beast, tusk of an elephant, a part of a lute
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும் – பெரும் 110 வளைந்த கொம்பினையுடைய காட்டுப்பன்றியின் வரவைப் பார்த்து நிற்கும் வளை வெண் மருப்பின் கேழல் புரக்கும் – ஐங் 265/2 வளைந்த வெண்மையான கொம்பினையுடைய ஆண்பன்றி காத்துவளர்க்கும் திரி மருப்பு இரலையொடு மட மான் உகள – முல் 99 முறுக்குண்ட கொம்பினையுடைய புல்வாய்க்கலையோடே மடப்பத்தையுடைய மான் துள்ள, தட மருப்பு எருமை மட நடை குழவி – நற் 120/1 அகலமான கொம்புகளையுடைய எருமைகளின் இள நடையினைக் கொண்ட கன்றுகள் சுறவு மருப்பு அன்ன முள் தோடு ஒசிய – நற் 131/5 சுறாமீனின் கொம்பு போன்ற முள்ளைக் கொண்ட இலைகள் முறிய தகர் மருப்பு ஏய்ப்ப சுற்றுபு சுரிந்த – அகம் 101/4 செம்மறியாட்டுக் கிடாயின் கொம்பினை ஒப்பச் சுற்றிக் கடை சுருண்ட கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு – குறு 363/1 கண்ணி போல் வளைந்த கொம்பினையுடைய தலைமைப் பண்புள்ள நல்ல காளை, பெரும் களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும் – அகம் 109/13 பெரிய களிற்றின் கொம்பொடு புலியின் வரி பொருந்திய தோலைத் தண்டமாகத் தான் ஏவலரை இறுக்கச்செய்யும் பாம்பு அணந்து அன்ன ஓங்கு இரு மருப்பின் மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும் – பொரு 13,14 பாம்பு தலையெடுத்தாற் போன்ற ஓங்கிய கரிய தண்டினையும்; கருநிறப்பெண்ணின் முன்கையில் (அணியப்பட்ட)அழகிய வளையலை ஒத்ததும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்