மரை என்பது ஒரு வகை மான்
1. சொல் பொருள்
(பெ) 1. ஒரு வகை மான், 2. காட்டுமாடு, ஆமா.
2. சொல் பொருள் விளக்கம்
காட்டுமாடு, ஆமா,
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Boselaphus. tragocamelus, The Nilgai or Blue Bull
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
சிலை ஒலி வெரீஇய செம்கண்மரை விடை – மலை 406
வில்லின் ஓசைக்குப் பயந்த சிவந்த கண்களையுடைய காட்டெருது
ஓய் பசி செந்நாய் உயங்குமரை தொலைச்சி – நற் 43/3
மிகுந்த பசியையுடைய செந்நாய் மெலிந்த மரை என்னும் மானைக் கொன்று
மரைஇனம் ஆரும் முன்றில் – குறு 235/4
கானமடமரை கண நிரை கவரும் – அகம் 69/8
மரை கடிந்து ஊட்டும் வரைஅக சீறூர் – அகம் 107/18
தெறிநடைமரை கணம் இரிய மனையோள் – அகம் 224/11
மரைஏறு சொறிந்த மா தாள் கந்தின் – அகம் 287/4
மனை பாழ் பட்டமரை சேர் மன்றத்து – அகம் 373/2
மெல்கிடு மடமரை ஓர்க்கும் அத்தம் – அகம் 399/15
மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே – புறம் 27/6
மரைஆன் கறந்த நுரை கொள் தீம் பால் – புறம் 168/8
மரைபிரித்து உண்ட நெல்லி வேலி – புறம் 170/1
மரைஇனம் ஆரும் முன்றில் – குறு 235/
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்