மரையா என்பது ஒரு வகை மான்
1. சொல் பொருள்
(பெ) ஒரு வகை மான்.
2. சொல் பொருள் விளக்கம்
ஒரு வகை மான்
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Boselaphus. tragocamelus, The Nilgai or Blue Bull
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
ஆடு அமை ஒழுகிய தண் நறும் சாரல்
மென்நடைமரையா துஞ்சும் – குறு 115/4,5
ஆடுகின்ற மூங்கில்கள் நீண்டு வளர்ந்த குளிர்ந்த மணமுள்ள மலைச் சரிவில்
மெல்லிய நடையையுடைய காட்டுப்பசுக்கள்/மரைமான்கள் துயிலும்
மன்றமரையா இரிய ஏறு அட்டு – குறு 321/5
மடகண்மரையா நோக்கி வெய்து-உற்று – குறு 363/3
அண்ணல்மரையா அமர்ந்து இனிது உறையும் – பதி 23/14
மரையாமரல் கவர மாரி வறப்ப – கலி 6/1
துளங்குநடைமரையா வலம்பட தொலைச்சி – அகம் 3/7
கன்றுஉடைமரையா துஞ்சும் சீறூர் – புறம் 297/4
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்