சொல் பொருள்
(பெ) 1. வீரம், 2. கொலைத்தொழில், 3. வலிமை,
சொல் பொருள் விளக்கம்
வீரம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bravery, valour, murder, killing, strength, power
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: யானை தாக்கினும் அரவு மேல் செலினும் நீல் நிற விசும்பின் வல் ஏறு சிலைப்பினும் சூல்மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை – பெரும் 134-136 யானை (தன்னைத்)தாக்க வந்தாலும், பாம்பு (தன்)மேல் (ஊர்ந்து)சென்றாலும், நீல நிற மேகத்தில் வலிய உருமேறு இடித்தாலும், சூல்கொண்ட மகளும் (அவற்றிற்கு அஞ்சிப்)பின்வாங்காத வீரத்தைப் பூண்ட வாழ்க்கை மறம் திருந்தார் என்னாய் நீ மலை இடை வந்த_கால் அறம் சாரான் மூப்பே போல் அழி_தக்காள் வைகறை திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திரு தகும் – கலி 38/18-20 வழியில் கொள்ளையர்கள் கொலைச்செயலினின்றும் மாறவில்லை என்று கருதாமல், நீ மலைவெளியில் வந்தபோது அறநெறியைக் கைவிட்டவன் முதுமையில் சீரழிவது போல், மனம் அழிந்துபோய்க் கிடந்தவள், விடியற்காலையில் நல்லொழுக்கமுடையவனின் செல்வம் போல் நாளும் சீர்பெற்றுச் சிறப்புறுவாள், நீயே பிறர் ஓம்பு_உறு மற மன் எயில் ஓம்பாது கடந்து அட்டு – புறம் 40/1,2 நீ, பகைவரது பாதுகாத்த வலிமை நிலைபெற்ற அரண்களைப் பாதுகாவாது எதிர் நின்று அழித்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்