சொல் பொருள்
(வி) 1. போர்வெறிகொள், எதிர், மாறுபடு, 2. எதிரிட்டுத் தாக்கு,
சொல் பொருள் விளக்கம்
போர்வெறிகொள், எதிர், மாறுபடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
oppose, differ, oppose and attack
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மறவர் மறல மா படை உறுப்ப – பதி 82/7 வீரர்கள் போர்வெறிகொண்டு திரிய, குதிரைகள் போர்க் கவசங்கள் பூண்டு இருக்க, வாளி வாளிகள் நிலைபெற மறலுவார் – பரி 9/54 ஒருவரின் கண்களாகிய அம்புகள் மற்றவரின் கண்களாகிய அம்புகள் மேல் நிலைத்து நிற்குமாறு எதிர்த்து நோக்குவார், காண்-தொறும் பொலியும் கதழ் வாய் வேழம் இரும் கேழ் வய புலி வெரீஇ அயலது கரும் கால் வேங்கை ஊறுபட மறலி பெரும் சினம் தணியும் குன்ற நாடன் – நற் 217/2-5 காணுந்தோறும் பொலிவுற்று விளங்கும், விரைவான செயற்பாடு வாய்க்கப்பெற்ற யானை கரிய நிறமுள்ள வலிமையான புலியை வெருட்டி ஓடச் செய்து, அருகிலிருக்கும் கரிய அடிமரத்தைக் கொண்ட வேங்கை மரம் சிதையுமாறு மோதித்தாக்கி தன்னுடைய பெரும் கோபத்தைத் தணித்துக்கொள்ளும் குன்றுகளையுடைய நாட்டினன்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்