சொல் பொருள்
(வி) மாறி மாறித் திரி(தல்)
சொல் பொருள் விளக்கம்
மாறி மாறித் திரி(தல்)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
roam or wander here and there repeatedly
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வீ அகம் புலம்ப வேட்டம் போகிய மாஅல் அம் சிறை மணி நிற தும்பி வாய் இழி கடாத்த வால் மருப்பு ஒருத்தலோடு ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின் வேங்கை அம் சினை என விறல் புலி முற்றியும் பூ பொறி யானை புகர் முகம் குறுகியும் வலி மிகு வெகுளியான் வாள்_உற்ற மன்னரை நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல் மறிதரும் அயம் இழி அருவிய அணி மலை நன் நாட – கலி 46/1-9 தான் இருந்து தேனுண்ட மலர்களைத் தனியே விட்டுவிட்டு, வேறு பூக்களை நாடிச் சென்ற பெரிய, அழகிய சிறகுகளைக் கொண்ட நீல மணி போன்ற நிறத்தையுடைய தும்பிகள், வாயிலிருந்து வடியும் மதத்தையும், வெண்மையான கொம்பையும் உடைய தலைமை யானையுடன் அழகிய வரிகள் கொண்ட புலி தாக்கிய போது வேங்கை மரத்தின் அழகிய கிளை என்று எண்ணி ஆற்றல் வாய்ந்த புலியைச் சூழ்ந்துகொண்டும் நெற்றியில் புள்ளிகள் பொறித்த யானையின் புள்ளிபுள்ளியான முகத்தைச் சேர்ந்தும், வலி மிகும் சினத்தால் வாளை உருவிக்கொண்டு நின்ற மன்னர்களைச் சமாதானம் செய்யும் வழியை நாடி அவர்களை நண்பர்களாக்க முயல்பவர்கள் போல மாறி மாறித் திரியும், சுனை மீது விழுகின்ற அருவியை உடைய, அழகிய மலையைச் சேர்ந்த நல்ல நாட்டினனே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்