சொல் பொருள்
மறுத்து – திரும்ப, மீள, மற்றும்
சொல் பொருள் விளக்கம்
ஒன்றைச் சொல்ல அதற்கு எதிரிடையாகச் சொல்வதோ, ஒன்றைச் செய்ய அதற்கு எதிரிடையாகச் செய்வதோ மறுப்பாகக் கொள்ளப்படும். ஆனால் “நான் சொன்னேன்; மறுத்து என்ன சொல்வது” என்பதில் மறுப்புப் பொருள் இல்லை. திரும்பவும், மீளவும் என்னும் பொருளேயுண்டு. இலக்கியம் வல்லார் ‘மற்றும்’ என்பது போல ‘மறுத்து’ என்னும் ஆட்சி பொதுமக்கள் வாழ்வில் உள்ளதாம். “நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். மறுத்து நீ என்ன செய்கிறாய்?” என்பதிலும் மறுத்து இப்பொருளதாதல் அறிக.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்