சொல் பொருள்
வி) 1. மிகுந்திரு, அதிக அளவில் காணப்படு, 2. நிறைந்திரு, 3. பெருக்கமடை
(பெ) மிகுதி,
சொல் பொருள் விளக்கம்
மிகுந்திரு, அதிக அளவில் காணப்படு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be plentiful, abound, be full, swell, plenty
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாடம் மலி மறுகின் கூடல் குட வயின் – திரு 71 மாடங்கள் மிகுந்திருக்கும் (ஏனைத்)தெருக்களையும் உடைய மதுரையின் மேற்றிசையில் நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதி பெயர – பதி 31/10 நெஞ்சில் நிறைந்த உவகையினராய், தாம் வாழும் ஊர்களுக்குத் திரும்பிச் செல்வர்; அன்னிமிஞிலி போல மெய்ம் மலிந்து ஆனா உவகையேம் ஆயினெம் – அகம் 262/12,13 அன்னி மிஞிலி என்பாளைப் போல உடல் பூரிக்கப்பெற்று அமையாத மகிழ்ச்சி உடையேம் ஆயினம் வீயா யாணர் நின்_வயினானே தாவாது ஆகும் மலி பெறு வயவே – பதி 36/1,2 குன்றாத புதுச்செல்வங்கள் வந்தடையும் உன்னிடத்தில் குறைபடாததாகும், மிகுதியாகப் பெற்ற வலிமை;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்