சொல் பொருள்
(வி) 1. மிகு, அதிகமாகு, 2. நிறை, ததும்பு,
சொல் பொருள் விளக்கம்
மிகு, அதிகமாகு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
increase, abound, be filled up, well up
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கணை கால் மா மலர் கரப்ப மல்கு கழி துணை சுறா வழங்கலும் வழங்கும் – நற் 67/6,7 திரண்ட தண்டினையுடைய கரிய மலர்கள் மறைந்துபோகும்படி நீர் பெருகும் கழிகளில் துணையோடு சுறாமீன்கள் நீந்தவும் செய்யும் மல்கு சுனை உலர்ந்த நல்கூர் சுர முதல் – குறு 347/1 நீர் ததும்பும் சுனைகள் வற்றிப்போன வறண்ட பாலை நிலத்தின் தொடக்கத்தில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்