சொல் பொருள்
மல்லாத்தல் – தோற்கச் செய்தல்
சொல் பொருள் விளக்கம்
குப்புறத்தள்ளல், மண்ணைக் கவ்வவைத்தல் என்பவை தோற்கச் செய்வதன் அடையாளமாக இருப்பதுபோல, மல்லாக்கக் கிடத்துதலும் தோற்க வைத்ததன் அடையாளமாகக் கருதப்படுகின்றது. ஆமையை மல்லாக்கக் கிடத்தினால் அரும்பாடுபட்டே திரும்பி ஊர முடிவது எண்ணத்தக்கது. முதுகில் மண்படல் குத்துச் சண்டையில் தோல்விப்புள்ளியாகக் கருதப்படுதலும் எண்ணத்தக்கது. குப்புறத்தள்ளிக் குதிரை ஏறல் போல, மல்லாக்கக் கிடத்தி மானங் கெடுத்தலும் வழக்கிடை அறியக் கூடியதே. “என்னை மல்லாத்தி விட்டு நீ போகவா பார்க்கிறாய்?” என்னும் வஞ்சின மொழி இதன் பொருள் விளக்கும்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்