சொல் பொருள்
(பெ) பார்க்க: மள்ளர்
சொல் பொருள் விளக்கம்
பார்க்க: மள்ளர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: யார்கொல் அளியர் தாமே யார் நார் செறிய தொடுத்த கண்ணி கவி கை மள்ளன் கைப்பட்டோரே – புறம் 81/3-5 இரங்கத்தக்கவர் தாம் யார்கொல், நாரால் பயிலத் தொடுக்கப்பட்ட ஆத்திக்கண்ணியையும் இடக் கவிந்த கையினையுமுடைய வீரனது கையின்கண் பட்டோர் கோள் சுரும்பு அரற்றும் நாள் சுரத்து அமன்ற நெடும் கால் மராஅத்து குறும் சினை பற்றி வலம் சுரி வால் இணர் கொய்தற்கு நின்ற மள்ளன் உள்ளம் மகிழ் கூர்ந்தன்றே – ஐங் 383/1-4 தேனை உண்ணும் சுரும்பினங்கள் ஒலிக்கும் நாள் காலையில் பாலை வழியில் செறிவான நெடிய அடிப்பகுதியைக் கொண்ட குட்டையான கிளையைப் பிடித்து வலமாகச் சுழித்துப் பூக்கும் வெண்மையான பூங்கொத்துகளைத் தன் காதலி பறித்துக்கொள்வதற்கு நின்ற இளைஞனின் உள்ளம் மகிழ்ச்சியடைந்தது,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்