Skip to content

சொல் பொருள்

(வி) 1. கூர் மழுங்கு, 2. ஒளி மங்கு

சொல் பொருள் விளக்கம்

கூர் மழுங்கு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

become blunt, be dim, obscure

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வை நுதி மழுகிய தடம் கோட்டு யானை – ஐங் 444/3

கூர்மையான நுனியும் மழுங்கிவிட்ட பெரிய கொம்பினைக் கொண்ட யானைப்படையையுடைய

விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்று
பசும் கதிர் மழுகிய சிவந்து வாங்கு அந்தி – புறம் 376/1,2

விசும்பின்கண்ணதாகிய நீத்தத்தைக் கடந்து சென்ற ஞாயிற்றினுடைய
பரிய கதிர் ஒளி குறைந்த செந்நிறங்கொண்டு மேற்றிசையில் வளைந்து தோன்றும் அந்திமாலைப்போதின்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *