சொல் பொருள்
மழுக்கட்டை – அறிவுக் கூர்மையில்லாதவன், மானமற்றவன்
சொல் பொருள் விளக்கம்
மழுங்கல், மழுங்குணி, மழுக்கட்டை, மழுக்கட்டி என்பனவெல்லாம் ஒரு தன்மையவே. மழுங்கல் என்பது கூரற்ற தன்மை. கூர்மை இரண்டு வகையாம். ஒன்று அறிவுக் கூர்மை; மற்றொன்று மானக் கூர்மை. இருவகைக் கூர்மை இல்லாமை மழுக்கட்டையாக வழங்கப்படுகின்றது. “அவன் மழுக்கட்டை எதைச் சொன்னாலும் அவனுக்கு ஏறாது” என்பது அறிவுக் கூர்ப்பின்மை “சூடு சொரணை இல்லாத மழுக்கட்டை” என்பது
மானக் கூர்ப்பு அன்மை.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்