சொல் பொருள்
(பெ) 1. கருத்த மேகங்களினின்றும் இறங்கும் நீர், 2. நீருண்ட மேகங்கள், 3. குளிர்ச்சி,
சொல் பொருள் விளக்கம்
கருத்த மேகங்களினின்றும் இறங்கும் நீர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
rain, clouds charged with rain, coolness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து – அகம் 13/13 மிகுந்த மழையைப் பொழிந்த ஞாயிறு கொண்ட அதிகாலைநேரத்தில் கண மழை பொழிந்த கான் மடி இரவில் – அகம் 392/12 கூட்டமான மேகங்கள் மழையைச் சொரிந்த கானமெல்லாம் அடங்கிய இரவில் ஈரிய கலுழும் இவள் பெரு மதர் மழை கண் – குறி 248 ஈரமுள்ளனவாய் கலங்கிநின்றன – இவளின் பெரிய செழிப்பான குளிர்ந்த கண்கள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்