Skip to content

சொல் பொருள்

(பெ) மகளிர் மட்டும் வழிபடும் ஓர் இறையிடம்.

சொல் பொருள் விளக்கம்

மகளிர் மட்டும் வழிபடும் ஓர் இறையிடம்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a worship place where only ladies worship.

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கயம் தலை மந்தி உயங்கு பசி களைஇயர்
பார்ப்பின் தந்தை பழ சுளை தொடினும்
நனி நோய் ஏய்க்கும் பனி கூர் அடுக்கத்து
மகளிர் மாங்காட்டு அற்றே – அகம் 288/12-15

மெல்லிய தலையினையுடைய மந்தியின் வருத்தும் பசியினை நீக்குமாறு
அதன் குட்டியினது தந்தையான கடுவன் பலாப்பழத்தின் சுளையினைத் தோண்டினும்
மிக்க துன்பம் வந்து பொருந்தும் நடுக்கம் மிக்க (தெய்வமுடைய) பக்கமலையில் உள்ள
கன்னியர் உறையும் மாங்காடு என்னும் ஊரின் காவலை ஒத்தது.

விலங்கினத்திற்குட்பட்ட குரங்கு இன்றியமையாக கடப்பாடுபற்றிப் பழச்சுளை தொட்டதாயின், ஆண்டுறையும்
தெய்வத்தால் அதற்கும் துன்பம் உண்டாகும். எனவே மகளிரே உறையும் மாங்காடு என்னும் பதி, தெய்வத்தின்
காப்பு மிக்குடையதென்பது போதரும்.- ந.மு.வே.நாட்டார் உரை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *