Skip to content

மாந்தை என்பது மாந்தரம்

1. சொல் பொருள்

(பெ) பார்க்க : மாந்தரம்

2. சொல் பொருள் விளக்கம்

பார்க்க : மாந்தரம்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம்
பண்டும் இற்றே கண்டிசின் தெய்ய – நற் 35/7,8

நீர்த்துறை பொருந்திய மாந்தைநகர் போன்ற இவளது மேனி நலம் முன்பொழுகிய களவுக்காலத்தும் இப்பெற்றியே இருந்தது, காண்

மாந்தை சேரநாட்டுக் கடற்கரை நகரங்களுள் ஒன்று. இடைக்காலத்தே அது மாதை எனக் குறுகி மறைந்து, இப்போது பழையங்காடி என்ற புகைவண்டி நிலையத்துக்கு அண்மையில் உள்ளது.- ஔவை.சு.து – உரை விளக்கம்

கடல் கெழு மாந்தை அன்ன எம்
வேட்டனையல்லையால் நலம் தந்து சென்மே – நற் 395/9,10

கடற்கரையில் உள்ள மாந்தை என்னும் நகரத்தைப் போன்ற எம்மை விரும்பினாயல்லையாகலான் நின்பொருட்டாலிழந்த எம் நலத்தைத் தந்து செல்வாயாக

இங்கு வரும் மாந்தை என்ற சொல்லை, மரந்தை என்று கொள்வார் ஔவை.சு.து. அவ்வாறு கொண்டு,
மரந்தை, சேரநாட்டுக் கடற்கரை ஊர்களுள் ஒன்று. இது மருண்டா (Marunda) என யவனர் குறிப்புக்களுள்
காணப்படுகிறது என்பார்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *